பெண்கள் மதரசா
பெண்கள் தங்கள் கணவன்மார்கள் பணிக்கும் மற்றும் குழந்தைகள் பள்ளிக்கும் சென்ற பின் தங்கள் ஓய்வு நேரங்களை வீணாக கழித்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக குவைத்தில் நான்கு பகுதிகளில் பெண்கள் மதரசா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இந்த வகுப்பில் குர்ஆனை முறையாக ஓதுவதற்கான பயிற்சி , குர்ஆன் தஃப்ஸீர் , இஸ்லாமிய சட்டங்கள் , போன்ற பாட திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டு நடத்தப்படுகின்றன . ஒவ்வொரு வகுப்பிலும் மாத தேர்வும் நடத்தப்படுகின்றன.வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கும் ஒரு நாள் வகுப்பு நடத்தப்படுகின்றன.
வகுப்புகள் நடைபெறும் இடங்கள்
சால்மியா – திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமை
மங்காஃப் – ஞாயிறு மற்றும் செவ்வாய்