இயற்கை மார்க்கம் இஸ்லாம்
كُنتُمْ خَيْرَ أُمَّةٍأُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِوَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗوَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَخَيْرًا لَّهُم ۚمِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُالْفَاسِقُونَ
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும்- அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். அல்குர்ஆன் 3:110
நாம் பெற்ற இந்த நேர்வழி உலக மாந்தர்கள் அனைவரும் அடைய வேண்டும் என்பதற்காகவும் அல்லாஹ் நம் மீது சுமத்தியுள்ள மாபெரும் கடமையான அழைப்பு பணியை செய்ய வேண்டும் என்பதற்காகவும் குவைதில் பல பகுதிகளில் முஸ்லிம் அல்லாத சகோதரகளிடம் இஸ்லாமிய அழைப்பு பணி செய்து அதன் மூலம் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக கொண்டால் அவர்களுக்கு குர்ஆன் மற்றும் இஸ்லாம் பற்றிய புத்தகங்கள் மற்றும் சீடி, டீவீடி ஆகியவை அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு அரசாங்க சான்றிதழ்களும் பெற்று வழங்கப்படுகின்றன. ஓய்வு நேரங்களில் அவர்களுக்கு இஸ்லாமிய வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. திருமண முடிப்பதாக இருந்தால் அதற்கான ஏற்பாடுகளும் செய்துக் கொடுக்கப்படுகின்றன. இதுவரை அம்கரா மற்றும் மங்காப் பகுதிகளில் மூன்று நிகழ்சிகள் நடத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் உரையும் அதனை தொடர்ந்து அவர்கள் கேள்விகளுக்கான பதில்களும் அளிக்கப்படுகின்றன. இறுதியில் உணவும்