மரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை !
இந்த உலக வாழ்க்கைக்கு பிறகு மறுமை வாழ்க்கை ஒன்று உண்டு என்று அனைத்து முஸ்லிம்களும் நம்பும் ஓர் நம்பிக்கை ஆகும். அந்த நாளில் பாவிகளுக்கு அவர்கள் செய்த பாவத்திற்கு தகுந்தாற்போல் இறைவனுடைய தண்டனையை அனுபவித்தேகவேண்டும்.அப்படியானால் எந்த பாவிகளுக்கு எந்த மாதியான தண்டனைகள் வழங்கப்படும் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
விபச்சாரம் செய்பவர்களுக்கான தண்டனை
* அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த(பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள்.
அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். நூல் : புகாரி
வட்டியை சாப்பிடுபவர்களுக்கான தண்டனை
* அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவந் நீந்திக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்துவைத்தபடி ஒருவர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்துவைத்துக் கொண்டிருக்கும் மனிதரிடம்(கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தம் வாயைத் திறக்கிறான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகிறான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தன்னுடைய வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக்கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும், “இவ்விருவரும் யார்?” என்று கேட்டேன். அவர்கள், என்னிடம், “செல்லுங்கள், செல்லுங்கள்” என்று கூறினார்கள். ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நூல் : புகாரி
* யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள் “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அல்குர்ஆன் 2:275
நன்மையை ஏவி அதை செய்யாமல் விட்டவர்களுக்கான தண்டனை
* இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, “நடங்கள்” என்றனர். நான் அவர்கள்
இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த நன்மையை ஏவி அதை செய்யாமல் விட்டவர்களுக்கான தண்டனைஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், “அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?” என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்” என்றனர். கல்லால் தலை நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக்கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து)விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறுவழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும். நூல் : புகாரி
மோசடி செய்பவர்களுக்கான தண்டனை
* கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் “இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார் இன்னார்
உயிர்த்தியாகி ஆகிவிட்டார்” என்று கூறிக்கொண்டேவந்து இறுதியாக ஒரு மனிதரைப் பற்றி “இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இல்லை! (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக்கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)” என்றார்கள். பிறகு (என்னிடம்) “கத்தாபின் புதல்வரே! நீங்கள் சென்று “இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று மக்களுக்கு அறிவித்துவிடுங்கள்!” என்றார்கள். அவ்வாறே நானும் சென்று “அறிந்துகொள்ளுங்கள்! இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று (மக்களிடையே) அறிவித்தேன்.
நூல் : முஸ்லிம்
* யார் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரிக்கிறாரோ அவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டுவான். நூல் : முஸ்லிம்
*அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அநியாயமாக ஒரு நிலத்தை அபகரித்துக்கொள்பவர் தம்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையிலேயே அவனை (மறுமையில்) சந்திப்பார்” என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம்
* மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவன் செய்த மோசடிக்கு அடையாளமாகக்) கொடி ஒன்று நடப்படும். அப்போது “அறிந்துகொள்ளுங்கள்: இது இன்ன மனிதரின் மகன் இன்ன மனிதரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)”என்று கூறப்படும். நூல் : முஸ்லிம்
* எவருக்கு இரு மனைவிகள் இருந்து ஒருவளுக்கு எதிராக மற்றவளிடத்தில் சாய்ந்து விட்டால் மறுமை நாளில்
அவரின் ஒரு தோல் புஜம் சாய்ந்தவராக எழுப்பப்படுவார் நூல் : நஸயீ
புறக்கனிக்கப்படும் மூன்று நபர்கள்
* நபி (ஸல்) அவர்கள் “மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப்
பார்க்கவுமாட்டான்;
அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு”
என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான் “(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்துவிட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின்
தூதரே!” என்று கேட்டேன். அதற்கு “தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர் (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர் பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம்
அம்மூவரும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம்
சத்தியத்தை மறைப்பவர்களுக்கு ஏற்படும் தண்டனை
* எவர் அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக்கொள்கிறார்களோ நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. அல்குர்ஆன் 2 :174
* (மறுமை நாளில்) ஒருவர் கொண்டுவரப்பட்டு அவர் நரகத்தில் வீசப்படுவார். கழுதை தன்னுடைய செக்கைச் சுற்றி வருவதைப் போன்று அவர் நரகில் சுற்றிவருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி “இன்னாரே (உமக்கேன் இந்த நிலை?) நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) கட்டளையிட்டு தீமை புரிய வேண்டாம் என (அவர்களைத்) தடுத்துக் கொண்டிருக்(கும்) நற்பணி செய்து கொண்டிருக்)கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு அந்த மனிதர் “நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) நான் கட்டளையிட்டேன்; ஆனால் அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாம் என்று (மக்களை) நான் தடுத்தேன்; ஆனால் அந்தத்தீமையை நானே செய்துவந்தேன்” என்று கூறுவார்கள். நூல் : புகாரி
யாசிப்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனை
* நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்டவர் தமது முகத்தில்
சதைத்துண்டு ஏதும் இல்லாதவராகவே (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பார். நூல் : முஸ்லிம்
கனவு கண்டதில் பொய் கூறுபவர்களுக்கான தண்டனை
* ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால் அவர் (மறுமையில்) இரண்டு
வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால் அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) “தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்” அல்லது “தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் “அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப்படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால்
அவரால் உயிர் கொடுக்க முடியாது” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” . நூல் : புகாரி
இவ்வுலகில் பாவங்களை செய்வதிலிருந்து நம்மை காப்பாற்றி மறுமையில் வெற்றி பெறும் கூட்டத்தில் நம் அனைவரையும் அல்லாஹ் சேர்த்தருள்வானக!!